தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 23, 2018

யோகேஸ்வரன் எம்.பியிடம் 50 இலட்சம் ரூபா பேரம் பேசிய அர்ஜூன் அலோசியஸ்!


தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மட்டக்களப்பு- கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்படும் எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பதற்கே, 50 மில்லியன் ரூபா தரப்படும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது. அர்ஜூன் அலோசியசினால் கட்டப்படும் இந்த எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. தம்மிடம் தொலைபேசி மூலம் பேசிய அவர், எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதற்கு, 50 மில்லியன் ரூபா தருவதாகவும் கூறினார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.