தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 500 நாளை எட்டியது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 500 ஆவது நாளாக முல்லைத்தீவில் கண்ணீருடன் போராட்டம்
நடத்தி வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 500வது நாளை எட்டியிருக்கும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அரசியல் வாதிகள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.