தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 21, 2018

உக்ரேன் எல்லையைக் கடக்க முயன்ற 5 இலங்கையர்கள் கைது


சட்டவிரோதமாக உக்ரேன் நாட்டின் எல்லையைக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக உக்ரேன் நாட்டின் எல்லையைக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, போலந்து - உக்ரேன் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 இலங்கையர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போலந்தின் எல்லையில் கைதான 13 பேரும் உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து, அவர்களுக்கு எதிராக உக்ரேன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.