தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 31, 2018

மன்னார் புதைகுழியில் இதுவரை 60 இற்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னார் 'சதொச' வளாகத்தில் இன்று 44ஆவது நாளாகவும் மனித எலும்புக் கூடுகளை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார் நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றன. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரைக்கும் 60 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது