தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் காயம், மருத்துவமனையில் சிகிச்சை


மேற்கு வங்காளத்தின் மிட்னாப்பூரில் பா.ஜனதா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால், இதற்காக இரும்பு தூண்களுடன் மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி உரையாற்றிய போது அவரை தெளிவாக பார்ப்பதற்காக கூடாரத்துக்கு போடப்பட்டு இருந்த இரும்பு கட்டுமானத்தின் மீது ஏறி நின்றனர். இதை கவனித்த பிரதமர் மோடி, அவர்களிடம் கீழே இறங்குமாறு அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்கு செவிமடுக்காத அவர்கள், தொடர்ந்து இரும்பு தூண்களிலேயே நின்றிருந்தனர். இதனால் பாரம் தாங்காமல் கூடாரத்தின் ஒருபகுதி திடீரென சரிந்து விழுந்தது.

உடனடியாக பா.ஜனதா தொண்டர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் காயம் அடைந்தவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள், பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்துடன் வந்த ஆம்புலன்ஸிலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 90 பேர் காயம் அடைந்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய கண்ணுக்கு எதிரேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனைக்கு சென்று பிரதமர் மோடி காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடாரம் சரிந்து 90 பேர் காயமடைந்த சம்பவம் பா.ஜனதாவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் விபத்து சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரும் காயம் ஏற்படவில்லை என மாநில பா.ஜனதா தலைவர் சுமித் தாஸ் கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வோம் என மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது