புதன், ஜூலை 04, 2018

தமிழீழ அலங்காரத்தில் உலாவந்த ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன்ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வலம்வந்து காட்சியளித்துள்ளார்.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்று (29.06.2018) நடைபெற்ற பூங்காவனத் திருவிழாவில் தமிழீழ வடிவத்தில் அமைக்கப்பட்ட அலங்காரத்தினுள் அம்மன் வீதியுலா வந்துள்ளார்.

தமிழர் தேசத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளபோதிலும் மாறாத கொள்கைப் பற்றுறுதியோடு மக்கள் அடக்குமுறைகளை மீறி தமது உணர்வுகளை வெளிக்காட்டிவருகின்றனர்.