தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 30, 2018

கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது: முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மருத்துவமனைக்கு சென்றார்.

நேற்று திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் ஆர். ராசா கூறும் போது, அது உண்மை தான் ஆனால், தற்போது மீண்டும் கருணாநிதி அவர்களின் உடல்நிலை சீராகியுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பிலும் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.
முதல்வர் வருகை :
கடந்த 26ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நேரில் சென்று உடல்நிலையை விசாரித்தார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சிவி சண்முகம், ஆகியோரும் கருணாநிதியின் உடல்நிலையை குறித்து அறிய, அவர் சிகிச்சை பெற்று வரும் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் முக அழகிரியும், கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.