தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகாவின் அதிரடி செயல்...

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரிக்கப்பட்ட தமது குடும்பத்தின் மீளிணைவுக்காக, ஐக்கிய நாடுகள்
சபையுடன் இணைந்து செயற்படுவதாகஇ இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட திலீபன் ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகா தெரிவித்துள்ளார்.

த கார்டியனுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
30 வயதான ஞானேஸ்வரன், அவரது மனைவி மற்றும் 11 மாத குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரால் தமது குடும்பத்தை மீண்டும் சந்திக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தவிடயம் தமக்கும் தமது மகளுக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன் தாம் தற்போது செய்வதறியாத நிலையில் இருப்பதாகவும் கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்