தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

‘பிபா’வின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியல்: நெய்மாருக்கு இடமில்லை

பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் நெய்மாரின் பெயர் இடம் பெறவில்லை.-
சூரிச்,

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. பிபாவில் உறுப்பினர்களாக உள்ள 211 நாட்டு அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், அங்கீகாரம் பெற்ற கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஓட்டு போட்டு சிறந்த வீரரை தேர்வு செய்கிறார்கள். ‘பிபா’ இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டுக்கான (2017-2018) உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு தகுதியான 10 வீரர்களின் பெயர் பட்டியலை ‘பிபா’ வெளியிட்டுள்ளது. அதில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாரின் பெயர் இடம் பெறவில்லை. சமீபத்தில் ரஷியாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் ஆன்டோன் கிரிஸ்மான், கைலியன் பாப்பே, ரபால் வரானே, போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெல்ஜியம் அணியின் கெவின் டி புருன், எடன் ஹசார்ட், உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்து தங்க ஷூ விருது வென்ற ஹாரி கேன் (இங்கிலாந்து), அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச், எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா ஆகியோர் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

19 வயதான கைலியன் பாப்பே, பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு அடுத்தபடியாக உலக கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமைக்குரியவர். முகமது சலா கடந்த ஆண்டில் ஐரோப்பிய கிளப் போட்டிகளில் 44 கோல்கள் அடித்து அசத்தி இருந்தார். ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் கிளப் அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக விளங்கியவர் ஆவார். இந்த 10 வீரர்களில் இருந்து விருதுக்கு தகுதியான 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். சிறந்த வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் செப்டம்பர் 24-ந் தேதி நடைபெறுகிறது.