வியாழன், ஜூலை 05, 2018

வடக்கின் சமூக கலாசார சூழல் பாரிய அழிவினை சந்தித்து வருகின்றது- ஸ்ரீநேசன்

போதைப்பொருள் அடாவடித்தனம் போன்றவற்றின் காரணமாக வடக்கின் சமூக கலாசார சூழல் பாரிய அ
ழிவினை சந்தித்து வருகின்றது. சிறுமிகளும் வயோதிபர்களும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும்  மோசமான நிலைமையில் இருந்து வடக்கை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் இனத் துவேசமும்  மதத் துவேசமும் ஆட்சி செய்து வருகின்றது. அவற்றை முழுமையாக அழித்து ஜனநாயகத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில்  தேசிய கணக்காய்வு சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்
வடக்கில் இன்று பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் மோசமானதாக உள்ளது. சிறுவர்களும்  இளம் பெண்களும் வயதான பெண்களும் கூட துஸ்பிரயோகம் செய்யப்படும் மிகவும் மோசமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் போதைபொருள்  வாள் வெட்டுக்கலாசாரம் என அனைத்துமே இன்று வடக்கில் பரவி வருகின்றது. இந்த விடயங்களை அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் வடக்கில் தெரிவித்தார்.
பாலியல் துஸ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டு சிறுமிகள் கொல்லப்பட்டு வரும் நிலையில் சட்டம் நீதி  நடவடிக்கைகள் கண்மூடித்தனமாக இருக்கின்றது. யுத்த காலத்திலோ அதற்கு முன்னரோ அவ்வாறு இடம்பெறவில்லை என்பதை  இராஜாங்க அமைச்சர் சுட்டிக்கட்டினர். எனினும் அதற்கு அப்பால் சென்று சில காரணிகளை கூறியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்