தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

அனந்தி சசிதரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயுதீன் இடையிலான அலுவலக நெருக்கம் தொடர்பிலேயே இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சரான அனந்தி சசிதரன் முன்னாள் போராளி எழிலனின் மனைவி என்ற நிலையில் , தற்போது வடக்கு மாகாண அமைச்சராக கொழும்பு நடுவன் அரசுடனான உறவை பேனவேண்டிய கடப்பாடு உண்டு.
இருப்பினும் கடந்த வாரம் தனது தேசிய அடையாள அட்டையை மாற்றுவதற்காக தனது அமைச்சுப் பதவியினை உறுதி செய்து கடிதம் வழங்குமாறு பிரதம செயலாளரை கோரியிருந்தார்.
அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதமானது அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அலுவலக இலக்க தொலை நகலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அமைச்சர் ரிசாட்டின் அலுவலகத்தில் இருந்து தொலை நகல் அனுப்பும் தேவை தொடர்பிலேயே தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.