தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 22, 2018

ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் விஜயகலாவுக்கு முக்கியத்துவம்

 விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிட்டு, சர்ச்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே பதவி பிடுங்­கப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு, பிரதமர் வடக்­கில் நேற்­றுப் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டது.

விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிட்டு, சர்ச்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே பதவி பிடுங்­கப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு, பிரதமர் வடக்­கில் நேற்­றுப் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டது.

உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் மற்­றும் வெளிவிவகார அமைச்­சர் உள்­ளிட்­டோர் யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற நிகழ்­வில் உரை­யாற்­றிய விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சாரப்­பட கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கருத்து தெற்­கில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைப்­பீ­டம், அவ­ரது இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யைப் பறித்­தது. அத்­து­டன் அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­க­ளும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது. தற்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாத்­தி­ரமே அவர் பதவி வகிக்­கின்­றார்.

பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­கில் நேற்­றுப் பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றார். அமைச்­சர்­க­ளுக்கு இணை­யாக, ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இல்­லாத சிறப்­பு­ரி­மை­யாக, முன்­வ­ரிசை ஆச­னம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு வழங்­கப்­பட்­டது.