தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

வடக்கில் மீன் உற்பத்திக்கான கைத்தொழிற் பேட்டை! - இந்திய முதலீட்டாளர்கள் திட்டம்

வட மாகாணத்தில் ஏற்றுமதிக்கான மற்றுமொரு மீன் உற்பத்தி தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளது. இதற்காக கடற்தொழில் நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி இந்திய முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் முதலீட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கh உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, இலங்கை இறால் , நண்டு உள்ளிட்ட வகைக்கு நல்ல கிராக்கி உண்டு. இந்த உற்பத்தி துறையில் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு தாம் விருப்பம் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாரிப்பு தொழிற்சாலை பேட்டை ஒன்று சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளது. இதனூடாக புதிதாக 800 பேருக்கு தொழில் வாய்ப்புக்களும் மறைமுகமாக 2000 பேருக்கும் மேற்பட்டோருக்கான தொழில்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமையவுள்ளது. இந்த முதலீட்டுக்கான திட்ட அறிக்கை ஒரு வார காலத்துக்குள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சிக்கு சமர்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.