www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 05, 2018

ஆவா குழுவைக் கட்டுப்படுத்த மேலதிக பொலிஸ் படைகள்!


யாழ்ப்­பா­ணத்­தில் திடீ­ரென அதி­க­ரித்­துள்ள வன்­மு­றை­கள் மற்­றும் குற்­றச் செயல்­களை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கி­லும், அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள ஆவா குழுவை முற்­றாக ஒழிக்­கும் நோக்­கி­லும் சிறப்­புப் பொலிஸ் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தில் திடீ­ரென அதி­க­ரித்­துள்ள வன்­மு­றை­கள் மற்­றும் குற்­றச் செயல்­களை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கி­லும், அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள ஆவா குழுவை முற்­றாக ஒழிக்­கும் நோக்­கி­லும் சிறப்­புப் பொலிஸ் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பொலி­ஸா­ரின் விடு­மு­றை­கள் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி வரை இடைநி­றுத்­தப்­பட்­டுள்­ள­து­டன், மன்­னார் மற்­றும் வவு­னியா மாவட்­டங்­க­ளி­லி­ருந்து பொலி­ஸார் மேல­தி­க­மாக யாழ்ப்­பா­ணத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ள­னர். இவ்­வாறு வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­னாண்டோ தெரி­வித்­தார்.

இந்­தச் சிறப்பு நட­வ­டிக்­கை­கள் வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் ரொசான் பெர்­னாண்­டோ­வின் உத்­த­ர­வுக்கு அமை­வாக யாழ்ப்­பா­ணப் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பாலித்த பெர்­ணான்­டோ­வின் மேற்­பார்­வை­யில், பொலிஸ் சிறப்பு அதி­ர­டிப் படை­யின் பாதாள உலக ஒழிப்­புப் பிரிவை வழி நடத்­திய தற்­போ­தைய யாழ்ப்­பாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­சர் வருண ஜய­சுந்­த­ர­வின் நேரடிக் கட்­டுப்­ப­ட்­டில் இடம்­பெ­ற­வுள்­ளன.

‘தனு ரொக் என்ற குழு­வொன்று தற்­போது யாழ்ப்­பா­ணத்­தில் இல்லை. அந்­தக் குழு­வில் இருந்­த­வர்­கள் திருந்தி சாதா­ரண வாழ்­வில் ஈடு­பட்­டுள்­ள­னர். அவர்­களைச் சீண்­டும் வகை­யில் அவர்­க­ளது உற­வி­னர்­கள், வீடு­கள் மீது தாக்­கு­தல்­களை ஆவா குழு முன்­னெ­டுத்­துள்­ளமை விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்­தக் குழு­வி­ன­ரைக் கட்­டுப்­ப­டுத்­தவே இந்­தச் சிறப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது’ என்று மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தெரி­வித்­தார்.