தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 31, 2018

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

நேற்று முந்தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் நிலையில் பின்னடைவு  ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் நிலை சீரானது.  உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு சீரானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இன்று திமுக தலைவர் கருணாநிதிக்கு  காவேரி மருத்துவமனையில் 4 -வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்தார். தற்போது இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு  உள்ளது. இதற்கு முன் துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு மற்றும்  கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பின் இரண்டாவது முறையாக ஐசியூவில் கருணாநிதி சிகிச்சைபெறும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.