தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 31, 2018

வாழை இலை வெட்டச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம்

தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற முன்னாள் போராளி திடீரென மரணமான சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழை இலை வெட்டுவதற்காக நேற்று வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.

இதனையடுத்து, உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது