தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறையும் சேர்ந்தே தலைதூக்கியது. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் போசா மண்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வந்த ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 5 போலீசாரும், பொதுமக்களில் 26 பேரும் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த வன்முறை கலவரங்களுக்கு மத்தியில் நேற்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 272 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை எண்ணிய வாக்கு எண்ணிக்கை அடிப்படையில், இம்ரான் கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. 137 இடங்களில் வெற்றி பெறும் கட்சி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும் என்கிற சூழல் இருக்கும் நிலையில் இம்ரான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டில் மற்ற கட்சிகளுக்கிடையே பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடைபெறுவதாக பிற கட்சிகள் குறை கூறி வருகின்றன. தேர்தல் முடிவு தாமதமாவது குறித்து தேர்தல் ஆணைய செயலாளர் பாபர் யாகூப் கூறுகையில், ”வாக்கு எண்ணிக்கையில் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னால் எந்த சதியும் இல்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை சுற்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்” எனக் கூறினார்.