தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

நீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சர் ஏற்றால் பதவி விலகுவேன்! - டெனீஸ்வரன்

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டால், தாம் பதவி விலக தயாராக இருப்பதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 127ஆவது அமர்வின் டெனீஸ்வரன் தொடர்பான விசேட அமர்வு இன்று கைதடியிலில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், “எனது அமைச்சு பதவி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டால் நான் எனது பதவியிலிருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.