www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஜூலை 15, 2018

வட மாகாண அமைச்சரவை குறித்த ஆலோசனையை வழங்குமாறு விக்னேஸ்வரனுக்கு கோரிக்கை


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய, வட மாகாண அமைச்சரவை குறித்த ஆலோசனையை தமக்கு வழங்குமாறு வட மாகாண முதலமைச்சரிடம், ஆளுநர் மீண்டும் கோரியுள்ளார்.

ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றைய தினம் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைச்சரவை விபரம் தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனையை விரைவாக வழங்குமாறு ஆளுநர் இதனூடாக கோரியுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்படவுள்ள 457 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியல் தொடர்பான விபரம், தமது அலுவலகத்தில் உள்ளதாவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சினால், நேற்றைய தினம் குறித்த பெயர்ப்பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பெயர் பட்டியலை பார்வையிடுவதற்காக இன்றும், நாளையும் ஆளுநர் அலுவலகத்தில் சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின், சம்பந்தப்பட்டவர்கள், ஆளுநர் ஊடாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகளை சமர்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த தொண்டராசிரியர்களுக்கான நியமனம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது