தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 24, 2018

டெனீஸ்வரன் வழக்கில் தடை உத்தரவு நீடிப்பு


டெனீஸ்வரன், வட மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்படுவதனை வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இடைநிறுத்தியமை செல்லுபடியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பு ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

டெனீஸ்வரன், வட மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்படுவதனை வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இடைநிறுத்தியமை செல்லுபடியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பு ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ எவ்வித அதிகாரமும் இல்லையென மனுதாரரான வே.டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை மனுதாரர் தனது மனுவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், கே. சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், பி.சத்யலிங்கம் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடுவதற்காக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.