தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 14, 2018

போலி நாணயத்தாள்களுடன் மாட்டினார் கடற்படைச் சிப்பாய்!

மதவாச்சி, பூனாவ பகுதியில் மூன்று, போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின் உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு 5000 ரூபா மற்றும் இரண்டு 1000 ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்த போது, கடை உரிமையாரால் அந்த நாணயத்தாள்கள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு மதவாச்சி பொலிஸாருக்கு அறிவித்தார்.

இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.