தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஜூலை 27, 2018

அனந்தியின் துப்பாக்கி விவகாரம் - வடக்கு மாகாணசபையில் வாக்குவாதம்

பாதுகாப்பு அமைச்சிடம் அமைச்சர் அனந்தி கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

பாதுகாப்பு அமைச்சிடம் அமைச்சர் அனந்தி கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

வட மாகாண சபையின் 128 ஆவது அமர்வு இன்று அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் பேரவைச் செயலகத்தில் ஆரம்பமாகியது. 127 வது விசேட அமர்வின் போது, ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் அயூப் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் துப்பாக்கி வைத்திருக்கின்றார் என்ற கருத்தினை வெளியிட்டமை தொடர்பில் பல சர்ச்சைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி விடயம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிக்க சபையில் அனுமதி கேரியிருந்தார்.

அவைத் தலைவரினால் அனுமதி வழங்கப்பட்ட போது, அனந்தி சசிதரன் தனது விளக்கத்தை தெரிவித்தார். அப்போது, உறுப்பினர் கேசவன் சயந்தன் குறுக்கிட்டு தனது கருத்தினை முன்வைத்ததால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது, அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில், கடந்த 127 ஆவது அமர்வு டெனிஸ்வரனின் வழக்கு விசேட அமர்வு, அஸ்மின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று துப்பாக்கி பெற்றுள்ளதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார். நான் ஒரு ஆயுததாரி, ஆயுதங்களில் இருப்பம் இருப்பவள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. கையில் ஆயுதத்தினை வைத்திருப்பவளாக இருந்தால், ஆயுதம் வைத்திருப்பதற்கான அனுமதி தொடர்பான முழு ஆதாரங்களையும் சபையில் வெளியிட வேண்டும்.

எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் கருத்தாக அதனை நான் பார்க்கின்றேன். சபையை மட்டுமல்ல உறுப்பினர் தவறாக வழி நடத்தியது, எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதனை சபை கண்டிக்க வேண்டும்.

அரசியல் பிரவேசம் நான் விரும்பிப் பெற்றுக்கொண்டதல்ல. அங்குள்ள சிலர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக்கொள்ளாவிடின் என்ன, அதிகபடியான வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாணத்தின் முதற் பெண்மணியாக இருக்கின்றேன். வரலாற்றுப் பதிவாக என்னை அமைச்சராக முதலமைச்சர் நியமித்துள்ளார். ஒரு போராளியின் மனைவியாக பாதிக்கப்பட்ட பெண்ணாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்காக கொண்டு, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக என்னை பலிக்காடாக மாற்றுவது மிகவும் வருந்தத்தக்கது.

போராட்டமும், ஆயுதம் என்பது எனக்குப் புதிய விடயம் அல்ல. நேரடியாவும் மறைமுகமாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகை இலங்கை அரசை எதிர்க்கின்றேன் என்றால், எனது பாதிப்பும், எனது மக்களின் பாதிப்பு, அரச உத்தியோகத்தராக இருந்த காலப்பகுதியில் பாப்பரசர் வந்த போது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் சிறைச்சாலையில் இருந்தேன்.

1996 ஆம் ஆண்டு சூரியகதிர் நடவடிக்கையின் போதும், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, இராணுவ முகாமில் சித்திரவதை அனுபவித்தேன். அரசினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவள் என்ற வகையில், இந்த நாட்டின் மக்கள் பாதுகாப்பினை கோரும் நிலையில், சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையிலும், இவர் போன்ற உறுப்பினர்களிடம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களைக் கோர வேண்டிய நிலை இருக்கின்றது என்றார்.

இதன்போது, அஸ்மினால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதற்கான ஆதாரம் இருக்கின்றதா என அவைத்தலைவர் அனந்தி சசிதரனிடம் கேட்டார். வார்த்தைக்காக கதைக்க வேண்டாமென்றும் அவைத் தலைவர் அனந்தி சசிதரனைக் கடிந்துகொண்டார்.

உறுப்பினர் அஸ்மின் அயூப் இந்த கருத்தினைக் கூறியதன் நோக்கம் என்ன? என்ன பின்னணியில் என்னிடம் ஆயுதம் இருக்கின்றதாக உறுப்பினர் அஸ்மின் கூறினார் என்றும் சபையில் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார். அவ்வாறு ஆயுதம் வைத்திருக்கின்றேன் என்றால், அந்த ஆதாரத்தினை சபைக்கு வழங்காது, ஏன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த கருத்து ஆபத்தினை ஏற்படுத்தும் கருத்து. இலங்கையின் சட்டத்தின் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுத் துப்பாக்கி வைத்துக் கொள்ளவதற்கான உரிமை இருக்கின்றது. ஆனால், உறுப்பினர் அஸ்மின் எந்த நோக்கத்தில் இந்த கருத்தனை தெரிவித்தார் என்பது மிகவும் சிக்கலான நிலைமைக்கு தள்ளியுள்ளது.

சபையில் 37 ஆண் உறுப்பினர்களின் மத்தியில் ஒரு பெண் உறுப்பினராக இருப்பதுடன், இந்த விடயத்தினை எதிரணியினர் கேட்டிருந்தால், அதற்குரிய பதிலை வழங்கியிருக்க முடியும். ஆனால், ஆளும் தரப்பினரே இவ்வாறு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. உறுப்பினர் அஸ்மின் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலும், எனக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை தொடர்பாக சபை கண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சபையில் தனது விளக்கத்தினை அளித்த உறுப்பினர் அஸ்மின் அயூப் தான் கூறிய விடயம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அப்போது, சபையில் கூறப்படும் விடயங்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாதென்றும், அந்த விடயங்களுக்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாதென்றும் அவைத்தலைவர் மன்றில் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் சபையில் தெரிவித்தார்.

ஆலவட்டம் வீச வேண்டுமென்ற அவசியமில்லை. துப்பாக்கி வேண்டுமென்ற கோரிய கோரிக்கை கடிதம். பிரதம செயலாளரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தகவலறியும் சட்டத்தின் மூலம் பல விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கப்பட்டுள்ளது. வலகம்பரை, பண்ணாகம், சுழிபுரம் என்ற விலாசத்திற்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பேசவில்லை. ஏன் அந்த அமர்வின் போது, நான் ஏன் இவற்றினை குறிப்பிட்டேன் என்பதே முக்கியமானது என அஸ்மின் சுட்டிக்காட்டினார்.