தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 30, 2018

தென்னிலங்கை அரசியல்வாதிகளை வடக்கிற்கு அழைத்துள்ள விஜயகலா

தென்னிலங்கையை மையப்படுத்தி இயங்கும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும், வடக்கின்
நிலைமைகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளால் எழுகின்ற ஆதங்கங்களின் விளைவாக வெளியாக்கப்படும் கருத்துக்கள், தென்னிலங்கையில் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுகின்றன.
வடக்கில் வாழ்கின்ற மக்களது பலப்பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்றன.இதனை கருத்தில் கொண்டே ஊடகங்களும், அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.