தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

சிறையில் மோசமாக நடத்தப்பட்டதாக மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி முறைப்பாடு

சிறையில் மோசமாக நடத்தப்பட்டதாக மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி முறைப்பாடு
யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, முன்னாள் போராளியான, மாற்றுத்திறனாளி கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நீதிமன்றின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி​யே, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான, குமாரசாமி பிரபாகரன், முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு, இடுப்புக்கு கீழ் இயங்காது. அவ்வாறான மாற்றுத்திறனாளியான தனக்கு, சிறைச்சாலையில் அதற்குரிய எவ்வித ஏற்பாடுகளும் காணப்படவில்லை என்றும் மலசலம்கூட கழிக்க முடியாது, பெரும் அவஸ்த்தைபடுவதாகவும், இவை, தனது உரிமையைப் பாதித்துள்ளது எனவும் தனது, முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் கனகராஜூடன் தொடர்புகொண்டு வினவிய போது, குமாரசாமி பிரபாகரன் என்பவரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், அது தொடர்பிலும், அரச மற்றும் பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதிகள் காணப்படுகின்றதா என்பது பற்றியும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.