தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

நிர்வாணமாக சுற்றி திரியும் கிரீஸ் பேய்! தலைதெறிக்க ஓடும் பெண்கள்!

ஹோமாகம பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நிர்வாணமாக சுற்றி திரியும் கிரீஸ் பேய்கள் காரணமாக
மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் பேய்கள் காரணமாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர் பெண்கள் வாசல்படி தாண்டுவதற்கு அச்சப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தை, பெலதகொட, கப்புருகொட ஆகிய பிரதேசங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், கடந்த ஒரு மாதமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு 7 - 10 மணி வரையிலும், அதிகாலை 2 - 5 மணி வரையிலும் நிர்வாண நபர் குறித்த பிரதேசங்களில் சுற்றி திரிவதாகவும், சிலரது வீட்டில் உள்ள சிசிடீவி கமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அத்துருகிரிய பொலிஸார் இந்த நிர்வாண நபரை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நபர் மின்விளக்குடன் பயணிப்பதனை பெண்கள் பலர் அவதானித்துள்ளனர். பெண்கள் கூச்சலிட்டவுடன் திடீரென இந்த நபர் காணாமல் போய்விடுவதாகவும், பின்னர் கண்டுபிடிக்க முடியாத அளவு தப்பிச் செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.