திங்கள், ஜூலை 09, 2018

கொட்டாஞ்சேனையில்இருவர் சுட்டுக் கொலை! - இருவர் படுகாயம்

கொழும்பு, கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் நேற்றுமாலை இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும்
இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்தனர். 58 வயதுடைய செல்லையா செல்வராஜ் என்பவரும் 50 வயதுடைய எலிசபத் பெரேரா என்பவருமே உயிரிழந்தனர்.
   சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்