தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 22, 2018

அனந்தி முன்மொழிந்த தீர்மானத்தை அவைத் தலைவர் நிராகரிப்பு

துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்தமை தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஓர் தீர்மானத்தை வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் முன்மொழிந்த போதும் அதனை வடக்கு மாகாண சபையின் தலைவர் நிராகரித்துள்ளார்.

துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்தமை தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஓர் தீர்மானத்தை வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் முன்மொழிந்த போதும் அதனை வடக்கு மாகாண சபையின் தலைவர் நிராகரித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சரான என்னிடம் ஓர் துப்பாக்கியுள்ளதாக சக உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தமை எனது சிறப்புரிமையை மீறும் செயலாக உள்ளமையினால், அதனை ஓர் தீர்மானமாக நிறைவேற்றக் கோரி வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அவைத்தலைவருக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் எழுதிய கடிதம் தொடர்பில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பதில் அனுப்பி வைத்துள்ளார். குறித்த பதிலில் மேற்படி விடயம் ஓர் தீர்மானமாக இணைத்துக் கொள்ளப்படமாட்டாது. இருப்பினும் இவ் விடயம் தொடர்பில் உங்களின் தன்நிலை விளக்கம் அளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனப் பதில் வழங்கியுள்ளார்.