தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

மஹிந்தவுக்கு சீனா கொடுத்த நிதி பற்றிய தகவல்கள் அடுத்த வாரம்! - அடுத்த குண்டைப் போடுகிறது ஜேவிபி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனாவினால், வழங்கப்பட்ட நிதி தொடர்பான தகவல்களை அடுத்த வாரம் வெளியிடப் போவதாக, ஜேவிபி தெரிவித்துள்ளது. குறித்த தகவல் அடங்கிய ஆவணங்களை ஆதாரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் தேர்தல் நிதி கொடுத்ததாக நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் வெளியிட்ட தகவல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜேவிபி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது