www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஜூலை 28, 2018

விக்னேஸ்வரன் மீண்­டும் போட்­டி­யிட விரும்­பி­னால்- எல்­லோ­ரை­யும் அர­வ­ணைக்க வேண்­டும் ;செல்­வம்


வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் விக்­னேஸ்­வ­ரன் கள­மி­றங்க விரும்­பி­னால் அவ­ரை­யும் அர­வ­ணைத்­துச் செல்­ல­வேண்­டும். இதுவே எங்­கள் கட்­சி­யின் நிலைப்­பாடு. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ அமைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார்.

வெலிக்­க­டைச் சிறைச்­சாலை படு­கொலை நினைவு அஞ்­ச­லிக் கூட்­டம் கர­வெட்­டிப் பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்க வந்­தி­ருந்த செல்­வம் அடைக்­க­ல­நா­த­னி­டம், வடக்கு மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

‘‘வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக மாவை சேனா­தி­ரா­சா­வின் பெயரை இன்­ன­மும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த மாகா­ண ­ச­பைத் தேர்­த­லி­லும் போட்­டி­யி­டப் போவ­தாக அறி­வித்­தால் அவரை உதா­சீ­னம் செய்­யக்­கூ­டாது.

அவ­ரை­யும் இணைத்து நாம் அனை­வ­ரும் ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­ட­வேண்­டும். விக்­னேஸ்­வ­ரனை அவ்­வ­ளவு எளி­தா­கத் தூக்கி எறிந்­து­வி­ட­மு­டி­யாது. நாம் ஒற்­று­மை­யா­கத் தேர்­தலை எதிர்­கொள்­ள­வில்­லை­யா­யின் தென்­னி­லங்கைக் கட்­சி­கள் இங்கு வேரூன்­றி­வி­டும்’’ என்று அவர் தெரி­வித்­தார்.