வெள்ளி, ஜூலை 06, 2018

விஜயகலாவின் கா​ணொளியை சமர்ப்பிக்கவும்

எல்.ரீ.ரீ அமைப்பை மீண்டும் கொண்டுவரவேண்டும் என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரன் ​கருத்து தெரிவித்த காணொளியை, குற்றப்பலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க 5 ஊடக நிறுவன பிரதானிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த 2 ஆம் திகதி, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாகல் கந்தே சுதந்த தேரர், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.