தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 31, 2018

விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள மும்பை சிறையின் வீடியோ வேண்டும்’’ பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைத்தால் அவரை அடைக்கப்படும் மும்பை சிறையின் வீடியோவை சமர்பிக்க இந்தியாவிற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். 

இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான விவகாரத்தில் விசாரணை நடந்த போது, மல்லையா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மல்லையா இங்கிலாந்து குடியுரிமையை பெற்றவர். அவரை கைது செய்தால் இந்தியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய சிறைகளில் மிகவும் மோசமான நிலையே இருக்கும். இருண்ட அறைகள், கொசுக்கடி மற்றும் சுகாதாரமற்ற சூழலுடன் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இந்தியா வசம் ஒப்படைத்தால் மல்லையா எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்று நீதிமன்றம் கேள்வியை எழுப்பியது. 

இன்று விசாரணை நடைபெற்ற போது, இந்திய அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டால் கைது செய்யப்பட்டு, மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சிறையின் புகைப்படங்களும் சமர்பிக்கப்பட்டது. இதற்கு மல்லையா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசு சமர்பித்துள்ள ஆவணங்களே சிறை அறையில் சூரிய ஒளி வராது, சுகாதாரமான காற்று வராது என்பதை காட்டுகிறது, இப்படம் திட்டமிட்டு எடுக்கப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டப்பட்டது.

மும்பை சிறை மனித உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளுடன் உள்ளது என்பதை புகைப்படங்கள் உறுதி செய்கிறது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் மல்லையா சூரிய ஒளி, சுகாதாரமான புதிய காற்று, மேற்கத்திய கழிப்பறை வசதி மற்றும் சுத்தரமான படுக்கையறை கொண்ட அறையில்தான் அடைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறைச்சாலை புகைப்படங்களை பார்த்த நீதிமன்றம், புகைப்படங்களை பார்த்து முடிவெடுக்க முடியவில்லை, புகைப்படங்கள் தெளிவாக இல்லாததால் சிறை உட்புறத்தை தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் வீடியோவை எடுத்து சமர்பிக்க கேட்டுக்கொண்டது.

நண்பகல் நேரத்தில் வீடியோ எடுக்குமாறும், அப்போது சிறை அறைக்குள் சூரிய ஒளி இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தும் அளவிற்கு வீடியோ காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. வீடியோவை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் செப்டம்பர் 12-ம் தேதிக்கு அடுத்த விசாரணையை ஒத்திவைத்தது. அதுவரையில் மல்லையாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீடித்தது.