தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 31, 2018

முதலமைச்சர் வேட்பாளரை தமிழரசுக் கட்சியே முன்னிறுத்தும்! - என்கிறார் சிவிகே

தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை முன்நிறுத்தும் என்பதில் தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
   “தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பேசுவதுண்டு. சில சமயங்களில் அவ்வாறாக பேசியவர்க
ள் தோற்றதும் உண்டு. ஆனபடியால் இவ்வாறு பேசப்படுவது ஒரு அர்த்தமான விடயமானாலும் பேசப்படுவதும் உண்மை தான். ஒருவகையில் தற்போதைய முதலமைச்சருடைய பெயரும் பேசப்படுகின்றது. தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் தங்களுடைய கட்சி சார்ந்த அதாவது கூட்டமைப்பினுடைய பங்காளிக் கட்சிகளில் பிரதான கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சியினுடைய ஒருவர் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட தன்மையுடைய ஒருவராக இருக்க வேண்டுமென்று ஒரு பொதுப்படைத் தன்மையான தீர்மானத்தையும் இயற்றியுள்ளனர். ஏனைய பங்காளிக் கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
கடந்த முறையும் மாவை சேனாதிராஜாவுடைய பெயர் பிரேரிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலையால் அவர் அதனை விட்டுக்கொடுத்து நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டு வரப்பட்டார். இப்போது தெளிவாகத் தெரிகிறது தமிழரசுக் கட்சி தன்னுடைய வேட்பாளர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்பது. அது யாரென்பது தற்போது தெரியவில்லை. கட்சி கூடித்தான் முடிவு எடுக்கப்படும். முதலமைச்சரும் தனித்தோ அல்லது வேறு நபர்களுடன் இணைந்து கூட்டமைப்பாகவோ தேர்தலில் நிற்கக் கூடும். இதிலும் தற்போது தளம்பல் நிலையே காணப்படுகின்றது.