தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 30, 2018

ஜனாதிபதியின் கூட்டத்தைப் புறக்கணித்தார் விக்னேஸ்வரன்!

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார். இது குறித்து இரண்டு கடிதங்கள் மூலம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கு அறிவித்திருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலணியின் 48 பிரதிநிதிகளில் 2 பேர் மாத்திரமே வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஏனையோர் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பையுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே தான் குறித்த செயலணியை தாம் எதிர்ப்பதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.