தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

சீனா - இந்தியா இராஜதந்திர இழுபறி - வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல்

சீனா - இந்தியா இராஜதந்திர இழுபறி - வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல்
வடக்கில் போரினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்வு காணுவார் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார்.

வடக்கில் போரினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்வு காணுவார் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று இடம்பெற்ற போது, வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் அமைச்சவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் எதனையும் சமர்ப்பித்தாரா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

“இல்லை. அது முன்னர் கொண்டு வரப்பட்டது. வடக்கு வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. சீன நிறுவனம் 1.3 பில்லியன் ரூபாய்க்கு இதனை நிர்மாணித்துத் தருவதாகவும், இந்திய நிறுவனம் 2.2 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணித்து தருவதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தன. 1.3 பில்லியன் செலவில் வீடுகளை நிர்மாணிப்பதற்குப் பதிலாக 2.2 பில்லியன் செலவிடுவது எதற்காகவென அமைச்சர் சுவாமிநாதன் கேள்வி எழுப்புகிறார்.

40,000 வீடுகளை அமைப்பதற்கு இந்திய நிறுவனம், கடந்த அரசாங்க காலத்தின் போது இணக்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சீனா தற்போது முன்வந்து 1.3 மில்லியனில் வீடுகளை அமைத்துக்கொடுக்க இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்திருப்பதையிட்டு இந்தப் பணியை சீனாவுக்கு வழங்குவதாக இல்லை இந்தியாவுக்கு வழங்குவதாக என்பது தொடர்பில் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே, இது இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை என்பதால் குறித்த இரு நிறுவனங்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளார். எது எவ்வாறாயினும் எந்த நிறுவனம் வீடுகளை அமைத்துக் கொடுக்கிறதென்பது, வடக்கு மக்களுக்குப் பிரச்சினை இல்லை, வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்