தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

கறுப்பு ஜூலையை முன்னிட்டு சுவிஸில் கவனயீர்ப்பு போராட்டம்

சுவிஸ்சலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக கறுப்பு ஜுலை தினத்தை நினைவுகூறும் பொருட்டு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ் பெண்கள் அமைப்பு என்பனவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தக்கவனயீர்ப்பு நிகழ்வில் கறுப்பு ஜூலை பற்றிய பல்வேறு தரவுகள் பல்வேறு மொழிகளில் விநியோகிகப்பட்டதும் குறிப்பிடத்தக்கது