தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 29, 2018

புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளன. ரேடியோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்வற்காக இந்த எலும்புக்கூடுகள், புளொரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்படவிருப்பதாக, மன்னார் மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

”இதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் நீதி அமைச்சின் ஊடாக, இந்த எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரேடியோ கார்பன் ஆய்வுகளின் மூலம், எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களின் வயதைக் கண்டுபிடிக்க முடியும்.

நேற்று வரை 54 எலும்புக் கூடுகள் இந்தப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் எலும்புக் கூடுகளுடன், 5 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. சில எலும்புக் கூடுகளில் கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய தடயங்கள் உள்ளன. எனினும் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளாமல் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.

இந்தப் புதைகுழியின் ஒரு பகுதியில், சடலங்கள், ஒழுங்காக போடப்பட்டுள்ளன. இன்னொரு பகுதியில் ஒழுங்கின்றிப் போட்டுப் புதைக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.