தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 23, 2018

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.