தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 28, 2018

மற்றொரு போருக்கு முகம் கொடுக்கும் சக்தி நாட்டுக்கு இல்லை! - ரணில்


மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாம் ஒன்றுபட வேண்டும். இதயங்கள் ஒன்றுபடும் போது அங்கு இனம், மதம், மொழி பொருட்டாகவே இருக்கிறது. நாடு துரிதமாக முன்னேற்றமடைவதன் மூலம்தான் எமக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது. நாடு முன்னேறுவதற்கு அமைதியும், சமாதானமும் மிக முக்கியமானதாகும். சகவாழ்வு, நல்லிணக்கம் வளர்ந்தோங்கும் போதுதான் இலக்கு நோக்கிய பயணத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.

கண்டியில், அளுத்கமவில மற்றும் சில இடங்களில் நடந்தது போன்ற சம்பவங்கள் இனியொரு போதும் நடந்துவிடக் கூடாது. நாமனைவரும் இதயங்களால் ஒன்றுபட்டால் மட்டுமே மாணவச் செல்வங்கள் எதிர்பார்க்கும் எதிர்காலத்தை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியும்.

நாம் தமிழை மட்டும், சிங்களத்தை மட்டும் படித்தால் போதாது. உலகத்தோடு இணைய, உறவாட ஆங்கிலம் மிக முக்கியமானது. அதன் பொருட்டே மும்மொழிக் கொள்கையை வகுத்துள்ளோம். எம்மிடையே மதங்கள் தடையாக இருக்கக் கூடாது எனவும் பிரதமர் கூறினார்.