தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது

38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த
போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று விசா முடிந்த பின்னரும் அங்கிருந்தநிலையில் போலி கடவுச்சீட்டை பெறுவதற்காக முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணின் பெயரில் போலி ஆதார் அட்டையும் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் சென்னையில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று கைதுசெய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் புழல் மத்திய சிறையில் அடை க்கப்பட்டுள்ளனர்.
77 இந்திய கடவுச்சீட்டுக்கள்இ 12 இலங்கை கடவுச்சீடுக்கள்இ கடவுச்சீட்டை தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 85 ஆயிரம் ரூபா பணம் ஆகியனவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் கைது செய்யப்பட்ட பயண முகவர் உட்பட 11 பேர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து தகவல்களைப் பெற்று அதனை அடிப்படையாக கொண்டு இவ்வாறு போலி இந்திய கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்