தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 24, 2018

யாழ். நல்லூர் பகுதிகளில் வாள் முனையில் கடைகளில் கொள்ளை!

யாழ். நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில், நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையுடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நேற்று இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்து முகமூடி அணிந்தவாறு வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பலே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்ட கும்பல், கோண்டாவில் பகுதியில் வீதியில் சென்ற இருவரின் தங்க ஆபரணங்களையும் அறுத்து சென்றுள்ளது. குறித்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில், யாழ் மற்றும் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.