திங்கள், ஜூலை 02, 2018

வடக்கு மாகாண முதன்மை வேட்பாளர் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் தீர்மானிக்கும்

அடுத்த வாரம் ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தமிழ்தேசிய ஒருங்கிணைப்புக் குழு
கூடி வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில்  கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, டெலோ அமைப்பினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா டெனீஸ்வரன் தொடர்பில் விரைவில் கட்சித் தலைமைகள் கூடி தீர்மானங்களை எடுக்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.