தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 18, 2018

வட மாகாண அமைச்சரவையைக் கூட்டக் கூடாது! - ஆளுநர் உத்தரவு


தனது அனுமதியின்றி வட மாகாண சபையின் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை கூட்டக் கூடாது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனது அனுமதியின்றி வட மாகாண சபையின் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை கூட்டக் கூடாது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மையில், வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பா.டெனீஸ்வரனும் ஓர் சட்டப்படியான அமைச்சராவார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் அமைச்சர் வாரியக் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு பிரதம செயலாளர் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதம செயலாளர் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள ஆளுநர், இன்றைய நிலையில் வடக்கு மாகாண சபையில் 6 அமைச்சர்கள் இருப்பதனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் வாரியக் கூட்ட விடயத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12ஆ ம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனுக்கு அனுப்பிய கடிதம் மூலம் அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.