தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 21, 2018

காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள்தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை
மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது.  இதனையடுத்து, பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா மற்றும் முதியவர்கள் சிலர் கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்து வந்தனர்.

இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்குவதற்காக ரெயில் பெட்டி வாசலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து கொண்டு, தங்கள் முதுகின் மீது அவரை இறங்குமாறு செய்தனர்.

காவலர்களின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.