தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

பரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்

உலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது.உலகம்
முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலாக பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஷெங்கிரிலா ஹோட்டலில் இருந்து கால்பந்து போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.
இவேளை, முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தனது காதலி டட்டியானவுடன் ரஷ்யா, மொக்கோவில் Luzhniki மைதானத்தில் இருந்து இறுதி போட்டியை பார்த்துள்ளனர்.அவர் இந்த புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.