தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 28, 2018

கருணாநிதிக்கு மருத்துவ உதவி செய்ய அரசு தயார் : முதல்வர்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ருணாநிதி காவேரி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அவர் 5 முறை முதல்வராக இருந்தவர். தற்போது எம்எல்ஏ.,வாகவும் இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் அவருக்கு மருத்துவ உதவி கேட்டால், வழங்க அரசு தயாராக உள்ளது.
நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நீட் தேர்வை அமல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றார்.