ஞாயிறு, ஜூலை 08, 2018

கோத்தாவை வேட்பாளராக ஏற்கமாட்டோம்! - திஸ்ஸ விதாரண போர்க்கொடி


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதை, இடதுசாரிக் கட்சி என்ற வகையில் நாம் ஏற்றுக் கொளளப் போவதில்லை என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதை, இடதுசாரிக் கட்சி என்ற வகையில் நாம் ஏற்றுக் கொளளப் போவதில்லை என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்தார்.

'கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இவ்விடயம் குறித்து கூட்டு எதிரணியிலுள்ள கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுக்கின்றன. பஷில் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தும்படி சிலர் பரிந்துரைத்துள்ளனர். இன்னும் சிலர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துமாறும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஒன்றரை வருடங்கள் காணப்படுகின்றன. எனவே இது குறித்து அடுத்த கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.