திங்கள், ஜூலை 02, 2018

ஈழப்படத்துடன் கோவில் திருவிழா - கொதிக்கிறார் பீரிஸ்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஈழ வரைபடம் ஏந்திச் செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

'நாடு தற்போது சீர்குலைந்து செல்கிறது. 2018 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அதில் முதல் ஐந்து மாதங்களில் கொள்ளைச் சம்வபங்கள் 1260, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 734, கொலைச் சம்பவங்கள் 214 ஆம் பதிவாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒழித்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது வடக்கில் ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆயுதங்கள் சிக்கியுள்ளன. மேலும் கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது ஈழ வரைபடம் ஏந்திச் செல்லப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் நாட்டில் நெருக்கடியான