www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 10, 2018

வெளிநாடு செல்ல முன் விஜயகலா மீது நடவடிக்கை எடுங்கள்! - பிவித்துரு ஹெல உறுமய

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஜயகலா மகேஸ்வரன் வெளிநாடொன்றிற்கு செல்லவுள்ளார் என தங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என கட்சியின் பிரச்சார செயலாளர் துசார திசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளிநாடு சென்றால் அது விசாரணைகளிற்கு இடையூறாக அமையும் இதன் காரணமாக உடனடி நடவடிக்கை எடுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி விஜயகலா மகேஸ்வரனை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்