தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 29, 2018

திமுக தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் பார்க்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று காரணமாகவும் வயதின் காரணமாகவும் அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலையை கேட்டு விசாரித்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறை ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சென்றனர். ஐசியு-வில் சிகிச்சை பெற்ற கருணாநிதியை வெங்கையா நாயுடு நேரில் பார்த்தார். கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் உடன் இருந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் பார்க்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெங்கையா நாயுடுவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.