வியாழன், ஜூலை 05, 2018

விஜயகலா விவகாரம் கூட்டமைப்பு மௌனம்

விடுதலைப் புலிகள் குறித்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியமை தொடர்பாக இப்போது எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பின்னர் அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விஜயகலா தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துவதாக சபாநாயகர் கூறியுள்ளதால், விசாரணைகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்து வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.